கடற்பயணம் *.தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது.*.உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி.*.அயல்நாட்டு வாணிகத்திலேயே தரைவழியாகச் செய்யும் வாணிகத்தைவிட, நீர் வழியாகச் செய்யும் வாணிகம் பெரும் பொருளைத் தரும்.*.அந்நாளில் கடல் வாணிகம் மிகவும் சிறந்திருந்தது.*.எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் போன்ற நாடுகள் தமிழர்களின் பொருள்களை விரும்பிப் பெற்றன.தமிழரின் கடற்பயணம்:*."திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஒளவையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனாரும்கூறியுள்ளனர். இவையே தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாகும்.*.தொல்காப்பியம்தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை"முந்நீர் வழக்கம்"எனக் குறிப்பிட்டுள்ளது.*.தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "பொருள்வயிற் பிரிவு" விளக்குகிறது. இப்பிரிவு"காலில்(தரைவழிப் பிரிதல்) களத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு" என இரு வகைப்படும்.யவனர்:*.தமிழர்கள்கிரேக்கரையும் உரோமானியரையும் "யவனர்"என அழைத்தனர்கப்பல் கட்டுதல்:*."கலம்செய் கம்மியர்" என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.*.அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன. புறநானூறு கூறும் உவமை: *.நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. கடலைக் குறிக்கும் சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி.மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்:கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மதிவை, பஃறி, ஓடம்.கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும்.பட்டினப்பாலை:*.புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புரண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன.*.அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.*.துறைமுகங்கள்: காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கைமுசிறி:*.முசிறி சேரர் துறைமுகம்.*.அங்குச் "சுள்ளி" என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள்கலங்கிப் போகும்படி வந்து நின்றன.*.யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றி சென்றனர் என்ற செய்தியைஅகநானூறு கூறுகிறது.கொற்கை:*.கொற்கை பாண்டிய துறைமுகம்.*.இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ கூறியுள்ளார்.*.மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தின் சிறப்பை கூறியுள்ளன.*."விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என மதுரைக்காஞ்சி கூறுகிறது.*.ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம்.*.கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம், பாக்கம் என்றழைப்பர்.காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்):*.இது சோழர்களின் துறைமுகம்.*.இங்கு பெரும்பாலும் வாழ்ந்தவர்கள் வணிகர்கள்.*.அங்கு சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.ஏற்றுமதி இறக்குமதி:*.பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் கூறுகின்றது.*.தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன.*.சீனத்துப் பட்டும் சர்க்கரையும் தமிழகத்திற்கு இறக்குமதி ஆயின.*.கரும்பு, அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவில் இருந்து கொண்டு பயிரிடப்பட்டது.*.கடல்சார் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பட்டம், பட்டயக்கல்வி கற்பிக்கப்பெற்று வருகின்றன.*.பட்டினப் பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் ஏற்றுமதியான பொருள்கள் - இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண் துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி.கடல் கடந்த தமிழ்தமிழ் - கிரேக்கம்*.அரிசி - ஒரைஸா*.கருவூர் - கரோரா*.காவிரி - கபிரில்*.குமரி - கொமாரி*.சோபட்டினம் - சோபட்னா*.தொண்டி - திண்டிஸ்*.மதுரை - மதோரா*.முசிறி - முசிரில
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக