இக்கால கவிதைகள்
பாரதியார்:
இந்திய ஒருமைப்பாட்டின் சிறப்பு
முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்- இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்
தமிழ் வளர்ச்சிக்கு வழிசொல்லும் மற்றொரு கவிதை:
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
பாரதிதாசன்:
விழிச்சியுற்ற தமிழர் எழுச்சிபெற:
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாகுதல் கண்டே
பொதுமையுடைமையை
எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்
கவிமணி:
பெண்ணின் பெருமை
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம்செய்திட வேண்டுமம்மா
தொழிலும் தமிழும் வளம்பெற வேண்டும் என:
சாலைகளில் பல தொழிகள் பெருகவேண்டும்
சபைகளிலே தமிழெழுத்து முழங்கவேண்டும்
நாமக்கல் கவிஞர்:
தமிழரின் சிறப்பு:
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்
சமுதாயத்தின் மீது:
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்
தொழில் கற்க வேண்டும் என்று:
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துகொள்
முடியரசன்:
தண்டமிழ் காதலை வலியுறுத்தும் பாடல்:
ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்
அன்னைமொழி பேசுதற்கு நாணு கின்ற
தீங்கு உடைய மனப்போக்கர் வாழும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி ?
சுரதா:
உவமைக் கவிஞர் என்று போற்றபடுபவர்
முல்லைக்கோர் காடுபோலும்
முத்துக்கோர் கடலேபோலும்
சொல்லுக்கோர் கீரன்போலும்
................
வல்லிகண்ணன்
ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்ற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக