ஆகு பெயர்எனப்படுவது, ஒருசொல்அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது. ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். (பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது.)எடுத்துக்காட்டுகள்நெல் அறுத்தான் - உண்மையில் அறுக்கப்பட்டது கதிர். நெல் என்பது இங்கு ஆகுபெயர் ஆனது.வெற்றிலை நட்டான் - நடப்பட்டது வெற்றிலைக் கொடி. இங்கு வெற்றிலைக் கொடிக்காக வெற்றிலை ஆகுபெயர் ஆனது.கண்என்னும் சொல் ஆகுபெயராய்க் கண்ணின் பார்வையை உணர்த்தும்.பெண் இயலார் எல்லாம் கண்ணின் பொது உண்பர்நண்ணேன் பரத்த நின் மார்பு[1]இந்தத் திருக்குறளில் கண்ணால் உண்பர் என்பது கண் பார்வையால் உண்ணுதலை உணர்த்தி நிற்கும் ஆகுபெயர்.வகைகள்ஆகுபெயர்கள் பதினெட்டு வகைப்படும். அவையாவன1.பொருளாகு பெயர்2.சினையாகு பெயர்3.காலவாகு பெயர்4.இடவாகு பெயர்5.பண்பாகு பெயர்6.தொழிலாகு பெயர்7.எண்ணலளவையாகு பெயர்8.எடுத்தலளவையாகு பெயர்9.முகத்தலளவையாகு பெயர்10.நீட்டலளவையாகு பெயர்11.சொல்லாகு பெயர்12.காரியவாகு பெயர்13.கருத்தாவாகு பெயர்14.உவமையாகு பெயர்15.அடை அடுத்த ஆகுபெயர்16.தானியாகுபெயர் 17.இருபடியாகு பெயர்18.மும்மடியாகு பெயர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக